search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொள்ளையன் கைது"

    • சக்திவேலை ஊர் மக்கள் தாக்கியதில் பலத்த காயமடைந்தார்.
    • சக்திவேலை வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக போலீசார் சேர்த்தனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை தாலுகா லந்தக்கோட்டை ஊராட்சி சீரங்கபட்டியைச் சேர்ந்தவர் கருப்புசாமி. இவர் நேற்று தனது வீட்டில் குடும்பத்துடன் தூங்கிக் கொணடு இருந்தார். அப்போது வீட்டுக்குள் மர்மநபர் புகுந்து திருடும் சத்தம் கேட்டது. உடனே சுதாரித்த கருப்புசாமி நைசாக எழுந்து அவனை மடக்கி பிடித்தார். உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்களையும் உதவிக்கு அழைத்தார்.

    இதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் திரண்டு வந்தனர். அவர்கள் வீடு புகுந்து திருட முயன்ற அந்த வாலிபரை மரத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர்.

    இது குறித்து குஜிலியம்பாறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதில் திருட்டில் ஈடுபட்டவர் திருச்சியைச் சேர்ந்த சக்திவேல் என்று தெரிய வந்தது.

    மேலும் சக்திவேலை ஊர் மக்கள் தாக்கியதில் பலத்த காயமடைந்தார். இதனைத் தொடர்ந்து அவரை வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக போலீசார் சேர்த்தனர்.

    இவர் வேறு ஏதேனும் திருட்டு வழக்குகளில் சம்மந்தப்பட்டுள்ளரா? என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கொள்ளையர்களை பிடிக்க சப்-இன்ஸ்பெக்டர் சரவணகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டிருந்தது.
    • தனிப்படை போலீசார் கொள்ளை நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் பெருவிளை பள்ளவிளை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இவரது மனைவி மேரி கலா (வயது 32).

    இவர் தனது மகனுடன் அருமநல்லூர் பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கடந்த 11-ந்தேதி மொபட்டில் சென்று இருந்தார். பின்னர் அவர் வீட்டிற்கு திரும்பி கொண்டு இருந்தபோது மேரிகலா கழுத்தில் கிடந்த 4½ பவுன் நகையை மர்மநபர் பறித்து சென்றார். இது குறித்து மேரி கலா பூதப்பாண்டி போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் முத்துராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். கொள்ளையர்களை பிடிக்க சப்-இன்ஸ்பெக்டர் சரவணகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டிருந்தது. தனிப்படை போலீசார் கொள்ளை நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    அப்போது மேரிகலாவிடம் நகை பறித்த கொள்ளையன் குறித்த அடையாளங்கள் தெரியவந்தது. இதையடுத்து அவரை பிடிக்க தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று இரவு போலீசார் முட்டைக்காடு புது காலனி பகுதியைச் சேர்ந்த சிபு (வயது 33) என்பவரை கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட சிபுவிடம் விசாரணை நடத்திய போது மேரிகலாவிடம் நகையை பறித்ததை ஒப்புக்கொண்டார். கொள்ளையடித்த நகையை அந்த பகுதியில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் அடகு வைத்து செலவு செய்ததாக கூறினார்.

    இதையடுத்து போலீசார் அந்த நகையை மீட்டனர். கைது செய்யப்பட்ட சிபுவிடம் விசாரணை நடத்தியபோது அவர், தக்கலை பகுதியில் மினி பஸ் டிரைவராக வேலை பார்த்து வந்தது தெரிய வந்துள்ளது. இவர் மீது பழவூர், அஞ்சுகிராமம், கன்னியாகுமரி, சுசீந்திரம், மணவாளக்குறிச்சி, இரணியல் பகுதியில் 15-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளது.

    கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட சிபு ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார். பின்னர் வெளியே வந்து அவர் சென்னைக்கு சென்று உள்ளார். பின்னர் ஊருக்கு வந்த அவருக்கு செலவுக்கு பணம் இல்லை. இதனால் நகை திருடியது தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட சிபுவிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • முருகனுடன் சேர்ந்து அவரது நெருங்கிய நண்பரான சூர்யா என்பவரும் திட்டம் தீட்டி இருப்பது தெரியவந்துள்ளது.
    • நகைகள் அனைத்தையும் கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள நகைக்கடை உரிமையாளர் ஸ்ரீவத்சவ் என்பவரிடம் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளனர்.

    சென்னை:

    சென்னை அரும்பாக்கத்தில் உள்ள பெடரல் வங்கி கிளையில் பொதுமக்கள் அடகு வைத்திருந்த 32 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக கொள்ளை கும்பல் தலைவன் முருகன், அவரது கூட்டாளிகள் சந்தோஷ், பாலாஜி, செந்தில்குமார் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 18 கிலோ நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இந்த நகைகளை எல்லாம் அரும்பாக்கம் போலீஸ் நிலையத்தில் கண்காட்சி போல நேற்று வைக்கப்பட்டி ருந்தன. கொள்ளை சம்பவம் நடைபெற்றது தொடர்பாக போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் விரிவாக விளக்கம் அளித்தார்.

    இந்த கொள்ளை சம்பவத்தில் முதலில் 3 பேர் மட்டுமே ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் வெளியானது. பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் 7 பேர் வரை கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது வெளிச்சத்துக்கு வந்தது.

    இதைத்தொடர்ந்து கொள்ளை கும்பலை கூண்டோடு பிடிக்க திட்டமிட்டு போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர். போலீசாரின் இந்த அதிரடி வேட்டையால்தான் கொள்ளை கும்பலை சேர்ந்தவர்கள் வேறு எங்கும் தப்பி ஓடுவதற்கு முன்னர் சிக்கினர்.

    பெடரல் வங்கி கொள்ளை சம்பவத்தில் அந்த வங்கியின் வில்லிவாக்கம் கிளையில் மேலாளராக பணியாற்றி வந்த முருகன் மட்டுமே மூளையாக செயல்பட்டதாக முதலில் தகவல் வெளியானது.

    இந்த நிலையில், முருகனுடன் சேர்ந்து அவரது நெருங்கிய நண்பரான சூர்யா என்பவரும் திட்டம் தீட்டி இருப்பது தெரியவந்துள்ளது.

    கொள்ளை சம்பவத்துக்கு இவரும் முருகனுடன் சேர்ந்து பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி இருப்பதும் அம்பலமாகி இருக்கிறது. இந்த வழக்கில் முதலில் பிடிபட்ட சந்தோஷ், பாலாஜி, செந்தில்குமார் ஆகியோரிடமிருந்து பெரும் பகுதி நகைகள் மீட்கப்பட்டு உள்ளன. இதுவரை 18 கிலோ நகைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

    மொத்தம் உள்ள 32 கிலோ நகைகளில் 18 கிலோ போக, மீதம் உள்ள 14 கிலோ நகைகளை கொள்ளையர்கள் எங்கு பதுக்கி வைத்துள்ளனர் என்பது தெரியாமல் இருந்தது. இந்த நிலையில் நகைகளை கொள்ளையடித்ததும், முருகன் 14 கிலோ நகைகளை தன் பங்குக்கு பிரித்து எடுத்துக்கொண்டு தப்பியதும் தெரியவந்தது.

    இந்த நகைகள் அனைத்தையும் முருகன், தனது நெருங்கிய கூட்டாளியாக விளங்கிய சூர்யாவிடம் கொடுத்து பத்திரமாக வைத்துக்கொள்ள கூறியதும் விசாரணையில் தெரிய வந்தது.

    இதன்படி இந்த 14 கிலோ நகையுடன் தப்பிய சூர்யாவை இன்று போலீசார் கைது செய்தனர்.

    சூர்யா இந்த நகைகள் அனைத்தையும் கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள நகைக்கடை உரிமையாளர் ஸ்ரீவத்சவ் என்பவரிடம் விற்பனை செய்ய திட்டமிட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    இதைத் தொடர்ந்து அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்காக தனிப்படை போலீசார் கோவையில் முகாமிட்டு விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். 14 கிலோ நகைகளையும் மீட்பதற்கான நடவடிக்கைகளில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

    இந்த வழக்கில் மேலும் 2 பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை பிடிக்கவும் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. சூர்யாவுடன் சேர்ந்து வங்கி கொள்ளையில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • முருகனின் செல்போன் எண்ணை வைத்து துப்புதுலங்கும் பணியில் போலீசார் தீவிரம் காட்டினர்.
    • காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த நகைகளை பார்க்கும்போது நகை கண்காட்சி போல காட்சி அளித்தது.

    சென்னை:

    சென்னை அரும்பாக்கத்தில் உள்ள பெடரல் வங்கி கிளையில் நேற்று முன்தினம் பட்டப்பகலில் காவலாளிக்கு குளிர்பானம் கொடுத்தும், ஊழியர்களை கட்டிப்போட்டும் 32 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த வங்கியின் சார்பில் பொதுமக்களிடம் இருந்து அடமானமாக பெற்றிருந்த நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டன. இதனால் வங்கி கிளை முன்பு வாடிக்கையாளர்கள் திரண்டனர்.

    இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக அரும்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் இதே வங்கியின் இன்னொரு கிளையில் மண்டல மேலாளராக பணியாற்றிய முருகன் என்பவர் கூட்டாளிகளுடன் சேர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

    முருகன், தனது 'ஜிம்' நண்பர்கள் சிலருடன் சேர்ந்து திட்டம் போட்டு கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியது கண்டு பிடிக்கப்பட்டது. பெடரல் வங்கியில் கொள்ளை அடிப்பதற்கு முருகன் மூளையாக செயல்பட்டதும், கொள்ளை கும்பலுக்கு தலைவனாக செயல்பட்டதும் தெரியவந்தது.

    இதையடுத்து முருகனின் செல்போன் எண்ணை வைத்து துப்புதுலங்கும் பணியில் போலீசார் தீவிரம் காட்டினர். போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் அண்ணா நகர் துணை கமிஷனர் விஜயகுமார் தலைமையிலான தனிப்படை போலீசார் முருகனையும் அவரது கூட்டாளிகளையும் பிடிக்க வலை விரித்தனர்.

    இதில் முருகனுடன் சேர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சந்தோஷ், பாலாஜி, சக்திவேல் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இவர்களிடம் இருந்து 20 கிலோ நகைகள் மீட்கப்பட்டன. பெடரல் வங்கியில் கொள்ளை அடிக்கப்பட்ட 32 கிலோ நகைகளில் இவர்கள் 3 பேரும் 20 கிலோ நகைகளை பங்கு போட்டு பிரித்து எடுத்துக்கொண்டது தெரியவந்துள்ளது.

    கொள்ளை சம்பவத்தில் ஈடுபட முருகனுடன் சேர்ந்து பல நாட்கள் திட்டம் போட்டதாகவும், பின்னரே கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியதாகவும் கைதானவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

    கைதான 3 பேரிடம் முருகன் பற்றிய தகவல்களையும் போலீசார் திரட்டி உள்ளனர்.

    இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான கொள்ளை கும்பல் தலைவன் முருகன் தப்பி ஓடி தலைமறைவாக இருந்தார். அவரை பிடிக்க 4 தனிப்படைகள் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி இருந்தன. தப்பி ஓடிய முருகன் வெளி மாநிலங்களுக்கு தப்பி சென்று இருக்கலாம் என்றும் சந்தேகிக்கிக்கப்பட்டது.

    பக்கத்து மாநிலமான ஆந்திராவில் உள்ள தனது நண்பர்கள் வீட்டில் முருகன் பதுங்கி இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீசாரில் ஒரு பிரிவினர் அங்கு விரைந்து சென்றனர்.

    பெங்களூரு மற்றும் கொல்கத்தாவுக்கும் தனிப்படையினர் விரைந்தனர்.

    இந்த நிலையில கும்பல் தலைவர் முருகன் இன்று அதிரடியாக கைது செய்யப்பட்டார். இவருடன் சேர்ந்து இந்த வழக்கில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொள்ளையர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட நகைகள் அனைத்தும் அரும்பாக்கம் போலீஸ் நிலையத்தில் இன்று காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. கொள்ளை வழக்கில் துப்பு துலக்கியது தொடர்பாக கமிஷனர் சங்கர் ஜிவால் விளக்கம் அளித்தார்.

    கொள்ளையர்கள் ஒரே பள்ளியில் படித்தவர்கள் என்றும், 10 நாட்களாக கொள்ளையடிக்க திட்டம் தீட்டியதாகவும் அவர் தெரிவித்தார்.

    இந்த கொள்ளை சம்பவத்தில் 7 பேர் வரை ஈடுபட்டிருப்பதும் தற்போது தெரிய வந்துள்ளது.

    காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த நகைகளை பார்க்கும்போது நகை கண்காட்சி போல காட்சி அளித்தது. கொள்ளை கும்பல் தலைவன் முருகன், கூட்டாளிகளை போலீசார் விரைந்து செயல்பட்டு கைது செய்து உள்ளனர்.

    கொள்ளை வழக்கில் துப்பு துலக்கி குற்றவாளிகளை கைது செய்த துணை கமிஷனர் விஜயகுமார் மற்றும் தனிப்படை போலீசாருக்கும் கமிஷனர் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

    நகைகள் கோர்ட்டு நடைமுறைக்கு பின்னர் வங்கியில் ஒப்படைக்கப்பட உள்ளது. கொள்ளை சம்பவத்தை தொடர்ந்து அடகு வைத்த நகைகள் உடனடியாக மீட்டு விட வேண்டும் என்பதில் வாடிக்கையாளர்கள் தீவிரமாக உள்ளனர்.

    • பண்ருட்டி பகுதியில் கைவரிசை காட்டிய கொள்ளையன் கைது செய்யப்பட்டார்.
    • மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் 3 கடைகளிலும் பூட்டை உடைத்து திருடி சென்றனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்தவர் தர்மராஜ். இவரது ஸ்டூடியோவின் பூட்டை உடைத்து 1.50 லட்சம் மதிப்பிலான காமிரா மற்றும் 10 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர். மேலும் அருகில் இருந்த ரவி என்பவரது மருந்து கடையிலிருந்து பூட்டை உடைத்து மருந்துகளை திருடி சென்றனர். இதுதவிர தாமோதரன் மெட்டல் கடையை பூட்டு உடைத்து 20 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை திருடி சென்று உள்ளனர். இது குறித்து பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவின் பேரில் டெல்டா பிரிவு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பாபு மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில், அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு காமிராக்களை சோதனை செய்தபோது, மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் 3 கடைகளிலும் பூட்டை உடைத்து திருடி சென்றனர். பின்னர் அங்கு செட்டிபாளையம் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு செல்கின்றனர்.

    இதுகுறித்து டெல்டா பிரிவு போலீசார் சந்தேகத்தின் பேரில் வாலிபர் ஒருவரை பிடித்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் எஸ்.மலையனூர் சேர்ந்த ஆறுமுகம் (வயது 28) என்பது தெரிய வந்தது. மேலும் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதும், மேலும் ஒரு நபர் இவருடன் இணைந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. உடனே ஆறுமுகத்தை போலீசார் கைது செய்தனர். இதுமட்டுமின்றி மர்ம நபர்கள் திருட்டு சம்பவத்திற்கு ஈடுபடுவதற்காக அங்குசெட்டிபாளையம் பகுதியில் இருந்த மோட்டார் சைக்கிளை திருடிக் கொண்டு பண்ருட்டி பகுதிக்கு வந்து உள்ளனர். பின்னர் 3 கடைகளில் பூட்டை உடைத்து பொருட்களை திருடி மீண்டும் மோட்டார் சைக்கிளை அதே பகுதியில் மோட்டார் சைக்கிளை விட்டு விட்டு சென்றது தெரியவந்துள்ளது. அதன் பிறகு தாங்கள் கொண்டு வந்த மோட்டார் சைக்கிளில் இருந்து தப்பி சென்ற சம்பவம் குறித்து பரபரப்பு தகவல்கள் தெரிய வந்துள்ளன. இந்த நிலையில் ஆறுமுகம் மீது ஏற்கனவே கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பது தெரியவந்தது. மேலும் மற்றொரு மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • பண்ருட்டி அருகேபெண்ணிடம் நகை பறித்த கொள்ளையன் கைது செய்யப்பட்டார்.
    • நகை செல்போன் ஆகியவைபோலீசார் பறிமுதல் செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி கடலூர் சிறையில்அடைத்தனர்

    கடலூர்:

    பண்ருட்டி அருகே காடாம்பு லியூர்கொஞ்சிகுப்பம் மாரியம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் சத்யானந்தன் இவரது மனைவி ராதா (37). இவர், காடாம்புலியூர் மாயா கார்டன் ரவி என்பவரின்தோப்பில் ஆடு மேய்த்து கொண்டிருந்தார்அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம ஆசாமி ஒருவர்இவரை மிரட்டி இவர் அணிந்து இருந்த செயின்மற்றும் செல்போ னை பறித்துசென்றா ர்.

    இதுகுறித்து காடாம்பு லியூர் போலீசா ர்வழக்குபதிவுசெய்து விசா ரணை நடத்திவந்தனர். கடலூர் எஸ்பி சக்தி கணேஷ் உத்தரவின் பேரின் பண்ருட்டி துணைபோலீ ஸ்சூப்பிரண்ட் சபியுல்லா மேற்பார்வையில் காடாம்பு லியூர் இன்ஸ்பெக்ட ர்ராஜதாமரை பாண்டியன்,சப்இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், தனிப்படை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன், போலீசார் ரகு மர்மஆசாமியை வலைவீசி தேடி வந்தனர்.

    நேற்று சாத்திப்பட்டு பஸ்நிறுத்தம் அருகில் போலீசா ர்வாகனசோதனையில் ஈடுபட்டிருந்தனர் அப்போது அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவர் போலீசை கண்டதும் ஓட்டம் பிடித்தார். அவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையி ல்காடாம்புலியூர் அடுத்த தெற்குமேல்மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ் ( 27 ) என தெரிய வந்தது. இவர் ஆடு மேய்த்துக் கொண்டு இருந்த பெண்ணிடம் நகை பறித்தை ஒப்பு க்கொண்டார்

    இதனை தொடர்ந்துஅவரை கைது செய்துஅவரிடமிருந்து நகை செல்போன் ஆகியவைபோலீசார் பறிமுதல் செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி கடலூர் சிறையில்அடைத்தனர்

    • ஆந்திர மாநிலம் சித்தூர், திருப்பதி, விஜயவாடா, தெலுங்கானாவில், ஐதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் பகல் நேரத்தில் சென்று பூட்டிய வீடுகளை நோட்டமிடுவார்.
    • இரவு நேரத்தில் நோட்டமிட்ட வீடுகளுக்கு சென்றுபூட்டை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடித்து வந்துள்ளார். தனி ஒரு ஆளாக சென்று கைவரிசை காட்டியுள்ளார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், சித்தூர், திருப்பதி உள்ளிட்ட பகுதிகளில் பூட்டிய வீடுகளை குறி வைத்து ஒரு கும்பல் திருட்டு சம்பவத்தில் ஈடுபடுவதாக போலீசாருக்கு புகார் வந்தது.

    சித்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நரசிம்ம ராஜி மற்றும் போலீசார் வனத்துறை சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் குண்டூர் பாபாய் குண்டா பகுதியை சேர்ந்த மகேஷ் (வயது 33). என தெரியவந்தது.

    இவர் ஆந்திர மாநிலம் சித்தூர், திருப்பதி, விஜயவாடா, தெலுங்கானாவில், ஐதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் பகல் நேரத்தில் சென்று பூட்டிய வீடுகளை நோட்டமிடுவார்.

    பின்னர் இரவு நேரத்தில் நோட்டமிட்ட வீடுகளுக்கு சென்றுபூட்டை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடித்து வந்துள்ளார். தனி ஒரு ஆளாக சென்று கைவரிசை காட்டியுள்ளார்.

    கொள்ளையடித்த நகைகளை விற்று லாடஜ்களில் அறை எடுத்து மது அருந்தி பெண்களுடன் உல்லாசமாக இருந்துள்ளார்.

    ஆந்திரா, தெலுங்கானாவில் 150 வீடுகளில் கொள்ளையடித்து இருப்பதாக மகேஷ் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

    மகேஷிடம் இருந்து 400 கிராம் எடையுள்ள தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து வேறு ஏதாவது குற்ற சம்பவங்களில் ஈடுபட்டாரா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விசாரணையில் தாராபுரம் உப்பாறு அணை பகுதியை சேர்ந்த ஆகாஷ்குமார் என்பதும்,மோட்டார் சைக்கிளை திருடியதையும் ஒப்புக்கொண்டார்.
    • இது குறித்து டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆகாஷ் குமாரை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

    ஈரோடு:

    ஈரோடு மீனாட்சி சுந்தரனார் சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பிரபுராஜா என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவரது சொந்த ஊர் திருப்பத்தூர் ஆகும். இவர் ரூ.1.25 மதிப்பில் புதிய மோட்டார் சைக்கிளை வாங்கி இருந்தார்.

    இந்த புதிய மோட்டார் சைக்கிளில் தான் பிரபு ராஜா தினமும் ஆஸ்பத்திரிக்கு வருவார். அங்குள்ள மோட்டார் சைக்கிள் நிறுத்தும் இடத்தில் நிறுத்திவிட்டு செல்வார்.

    இதேபோல் சம்பவத்தன்றும் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு பணிக்கு சென்று விட்டார்.

    பின்னர் மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் திருட்டுப் போய் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். யாரோ மர்ம நம்பர் கள்ள சாவி போட்டு மோட்டார்சைக்கிளை திருடி சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து ஈரோடு டவுன் போலீசில் பிரபுராஜா புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் டவுன் குற்றப்பிரிவு போலீசார் எல்லைமாரியம்மன் கோவில் பகுதியில் வாகன சோதனை ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வாலிபர் ஒருவர் வந்தார். அவரை நிறுத்தி போலீசார் அந்த வாலிபரிடம் விசாரணை நடத்திய போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறினார்.

    இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வாலிபரை டவுன் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த குண்டடம், உப்பாறு அணை பகுதியை சேர்ந்த ஆகாஷ்குமார்(23) என்பதும், பிரபு ராஜாவின் மோட்டார் சைக்கிளை திருடியதையும் ஒப்புக்கொண்டார்.

    மேலும் போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் இவர் மீது திருப்பூரில் மோட்டார் சைக்கிள் திருடியதாக 4 வழக்குகளும், திண்டுக்கல்லில் 3 வழக்குகள் என மொத்தம் 7 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்தது.

    இது குறித்து டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆகாஷ் குமாரை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

    • மணிகண்டனை பல்வேறு மாவட்ட போலீசார் தன்னை தேடி வருவதால் போலீசாரிடம் சிக்காமல் இருப்பதற்காக அவர் பகலில் சாமியார் வேடம் போட்டு சுற்றியுள்ளார்.
    • பகலில் சாமியார் போல பல்வேறு பகுதிகளுக்கு சென்று பூட்டி இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு இரவில் அந்த வீட்டில் தனது கூட்டாளிகளுடன் சென்று கொள்ளையடித்து வந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    வாழப்பாடி:

    சேலம் அருகே உள்ள மின்னாம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர் சின்னசாமி (வயது62).

    இவரும் இவரது மனைவி ராஜாமணியும், கடந்த 2-ந்தேதி (சனிக்கிழமை) காலை, பழனிமலை முருகன் கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக வீட்டை பூட்டிவிட்டு சென்றார்.

    மறுநாள் அதிகாலை 2 மணியளவில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, கதவு உடைக்கப்பட்ட நிலையில் வீடு திறந்து கிடந்ததோடு, பீரோக்களில் வைத்திருந்த 40 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.80 ஆயிரம் ஆகியவற்றை மர்ம கும்பல் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து, சின்னசாமி காரிப்பட்டி போலீசில் புகார் செய்தார்.

    இவரது புகாரின் பேரில் காரிப்பட்டி இன்ஸ்பெக்டர் (பொ) உமாசங்கர் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த கொள்ளை கும்பலை பிடிக்க, சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபிநவ் உத்தரவின் பேரில் போலீசார் செந்தில்ராஜ், மோகன், சதிஸ்குமார், உதயக்குமார் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படை போலீசார் துரிதமாக செயல்பட்டு, சுற்றுப்புற பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

    அதன்படி துப்பு துலக்கியதில் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சேலம் கன்னங்குறிச்சி பகுதியை சேர்ந்த வாலிபர் மணிகண்டன் (33), பொன்னம்மாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த அமிர்ஜான் (34) மற்றும் செல்வராஜ் என்கிற சாகுல் ஹமித் (53) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

    இந்த கும்பலிடம் இருந்து 40 சவரன் தங்க நகைகள், ரூ.80 ஆயிரம் மற்றும் கொள்ளையடிக்க பயன்படுத்திய ஆட்டோ ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

    இந்த கொள்ளை சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள வாலிபர் மணிகண்டன் மீது, ஏற்கனவே சேலத்தில் 2 கொலை வழக்கு மற்றும் ஒரு கொலை முயற்சி வழக்கு, ஆள் கடத்தல் வழக்கு, கொள்ளை மற்றும் திருட்டு வழக்குகளும் உள்ளன. இதுமட்டுமின்றி, நாமக்கல், ஈரோடு, விருதுநகர், தென்காசி, துாத்துக்குடி, திருச்சி மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் பல்வேறு கொள்ளை வழக்குகள் உள்பட 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது.

    இதுகுறித்து தனிப்படை போலீசார் நடத்திய தொடர் விசாரணையில், இந்த கொள்ளை வழக்கில் தொடர்புடைய மணிகண்டன், அயோத்தியாப்பட்டணத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்ததும், அடிக்கடி தனது காதலியை வரவைத்து உல்லாசமாக இருந்ததும் தெரியவந்தது.

    மணிகண்டனை பல்வேறு மாவட்ட போலீசார் தன்னை தேடி வருவதால் போலீசாரிடம் சிக்காமல் இருப்பதற்காக அவர் பகலில் சாமியார் வேடம் போட்டு சுற்றியுள்ளார்.

    அவரை கண்டு யாரும் சந்தேகிக்காத வகையில் உலா வந்தார். மேலும் பகலில் சாமியார் போல பல்வேறு பகுதிகளுக்கு சென்று பூட்டி இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு இரவில் அந்த வீட்டில் தனது கூட்டாளிகளுடன் சென்று கொள்ளையடித்து வந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    கொள்ளையடித்த பணம், தங்க நகைகள் உள்ளிட்ட பொருட்களை கொண்டு பெண்களுடன் உல்லாசமாக இருந்துள்ளார். மணிகண்டனிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    கற்பனையான சினிமா காட்சிகளை விஞ்சும் வகையில், மணிகண்டன் உலா வந்த தகவல் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொள்ளை சம்பவம் நடந்த 3 நாட்களில் கொள்ளை கும்பலை கைது செய்ததோடு, தங்கநகைகள் மற்றும் பணத்தை மீட்டுக் கொடுத்த தனிப்படை போலீசாருக்கு, போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் காரிப்பட்டி காவல் நிலையத்திற்கு நேரில் சென்று பாராட்டு தெரிவித்தார்.

    ×